Print

கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை மாகாண அரசாங்க சேவையின் கீழ் ஆசிரிர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020 (2021) 

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண சபைக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வட மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவ்வாறு வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கும் வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.lk   எனும் முகவரியில் பார்வையிட முடியும்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அவ் விண்ணப்பத்துடன் கீழ்க் குறிப்பிடப்படும் ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியை வட மாகாண கல்வி அமைச்சின் தொலைநகல் இலக்கத்திற்கு (021 222 0794 / 021 222 2239 / 021 222 2293) 2021.01.12 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைப்பதுடன் அதன் மூலப் பிரதியினை செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுள்ளார். அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர் ஆசிரியர் நியமனம் - 2020 (2021)” எனக் குறிப்பிடவும்.

  1. தேசிய அடையாள அட்டை
  2. பிறப்புப் பதிவுப் புத்தகம்
  3. விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்)

 குறிப்பு :

  1. தமிழ் மொழி மூல விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி மூலத்திலும் சிங்கள மொழி மூல விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழி மூலத்திலும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கொள்வது அவசியமாகும்.
  2. தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சகல ஆவணங்களிலும் தங்கள் பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்ட தொடர் இலக்கத்தினைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

 

Attachments:

1. Tamil Medium List

2. Sinhala Medium List

3. English Medium list

4. Form - Tamil

5. Form - English

6. Instruction 

Hits: 4618