கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் - 2021 

 

மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 386 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு வட மாகாணத்தின் கீழுள்ள 08 வலயங்களின் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தயார் செய்யப்பட்டு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் ஆசிரியர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.lk  வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.edumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும்.

எனவே நியமனம் செய்யப்பட்டுள்ள டிப்ளோமாதாரர்கள் ஆசிரிய பணிக்குரிய கௌரவத்துடன் பெண்கள் இள வர்ண சேலையுடனும் ஆண்கள் கறுப்பு வர்ண நீள் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற சட்டையும் (சேட்) அணிவதுடன் கழுத்துப் பட்டி (Tie) அணிதல் வேண்டும். 2021.01.18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தமது பெயர் நிரற்படுத்தப்பட்டுள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் தங்களுக்குரிய நியமனக் கடிதங்களை பெற்று அதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி தாம் நியமனம் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் கடமைக்கு அறிக்கையிட முடியும் என்பதனை அறியத்தருகின்றேன். தேவையான அறிவுறுத்தல்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் தமது ஆளடையாளத்தினை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டை  செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நியமனதாரர்கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.

வலய ரீதியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வருமாறு

 

இல.     

மாவட்டம்

வலயக் கல்வி

அலுவலகம்

முகவரி

நியமிக்கப்பட்ட

ஆசிரியர்களின்

எண்ணிக்கை

1

மன்னார்

மன்னார்

மன்னார் நகரம்

59

 

 

மடு

ஆண்டான்குளம்

61

2

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

முல்லை மாங்குளம் வீதி, முல்லைநகர்

64

 

 

துணுக்காய்

A 9 வீதி மாங்குளம்

66

3

கிளிநொச்சி

கிளிநொச்சி

A 9 வீதி கிளிநொச்சி

35

4

வவுனியா

வவுனியா வடக்கு

A9 வீதி புளியங்குளம், வவுனியா

43

 

 

வவுனியா தெற்கு

கண்டி வீதி, வவுனியா

26

5

யாழ்ப்பாணம்

தீவகம்

வங்காளவடி, வேலணை  

32

மொத்தம் 

386

 எனவே இத்துடன் வலயயாக ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எவ் வலயத்தின் கீழ் தமது பெயர் நிரற்படுத்தப்பட்டுள்ளதோ அவ் வலயத்திலேயே தாங்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். தமது பெயருக்கெதிரே காணப்படும் தொடர்பிலக்கத்தினைக் (Ref. No) குறித்துக் கொள்வது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாய் அமையு0ம்.

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

April 2024
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book