Print

புதிய வகுப்பறைக் கட்டட திறப்புவிழா  - யா / இராமநாதன் கல்லூரி மற்றும் மு / ஒலுமடு தமிழ் வித்தியாலயம்

இலங்கை இந்திய நட்புறவுத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளுக்கான புதிய வகுப்பறைக் கட்டடம் அமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் 20 பாடசாலைகளுக்கான வகுப்பறைக் கட்டடங்கள் கடந்த வருடங்களில் திறந்துவைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் யா / இராமநாதன் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் 12.03.2021 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு கோபால் பக்லே அவர்கள் மற்றும் வடமாகாண சபை பேரவைத் தலைவர் கௌரவ சி.வே.க. சிவஞானம் அவர்களால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

இச்சந்தர்பத்தில் மு / ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் இத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் நிகழ்நிலைக் காணொளி மூலம் திறந்துவைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகரால் யா / இராமநாதன் கல்லூரி, மு / ஒலுமடு தமிழ் வித்தியாலயம் மற்றும் மு / கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கான சங்கீத உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சு செயலாளர் திரு. இ.இளங்கோவன் , மாகாணக் கல்விப் பணிப்பாளர், திரு. செ.உதயகுமார் மற்றும் கல்வி அதிகாரிகள், பாடசாலை நலன்விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர்.

 

Hits: 8788