Print

மாணவர்களுக்கான பொது அறிவுப் புதிர்ப்போட்டி

மாணவர்களுக்கான பொது அறிவினை விருத்திசெய்யும் நோக்கில் பொது அறிவுப் புதிர்ப்போட்டி குளோபல் தமிழ் யூரியுப் தளத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அடுத்த போட்டி எதிர்வரும் 18.11.2021 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.  இதில் மாணவர்கள் பங்குகொண்டு தங்கள் பொது அறிவினை விருத்தி செய்யமுடியும். 

அறிவுத்தேடல் பொது அறிவுப் போட்டியின் 5வது நிகழ்ச்சி நவம்பர் 18 வியாழக்கிழமை போயாதினத்தன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பொது அறிவை வளர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பதுடன் தயவு செய்து உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அயலார் மற்றும் அறிமுகமானவர்களுடன் இந்த நிகழ்ச்சி பற்றிய விபரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இன்றைய பொது அறிவுப் போட்டிநிகழ்சசியில் பங்கேற்க குளோப் தமிழ் யூரியுப் தளத்துடன் https://youtube.com/c/GlobeTamil இணைந்துகொள்ளுங்கள்.

இந்தப்போட்டி நிகழ்ச்சியில் புதிதாக பங்கேற்பவர்கள் 15 நிமிடங்கள் முன்கூட்டியே 3.45 மணிக்கு இணைந்தால் மாதிரி வினாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களைத் தயார் செய்யமுடியும்.

https://globetamil.com/2021/11/15/globe-tamils-fifth-general-knowledge-competition-to-be-held-on-poya-day/

 

 

Hits: 1622