Print

பதிற்றுப்பத்து”, “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூல்கள் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்பு செய்யப்பட்ட “பதிற்றுப்பத்து”   நூலும், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூலும், கல்வி அமைச்சின் மண்டபத்தில் 06.12..2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநாகரசபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பழைமையான நூல்களை அழியவிடாது பாதுகாக்கும் பொருட்டு “பதிற்றுப்பத்து” நூலும் இன்றைய தலைமுறையினருக்கு உபயோகமான “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூலும் வெளியிடப்பட்டுள்ளது.  பதிற்றுப்பத்து நூலுக்கான மீள்பதிப்பாசிரியராக  பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும், திருக்குறள் ஆய்வூக்கட்டுரை நூலுக்கான தொகுப்பாசிரியராக முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கடமையாற்றினர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. பதிற்றுப்பத்து நூலுக்கான  வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை வரலாற்றுப் பேராசிரியர் கலாநிதி.செ.கிருஷ்ணராஜா அவர்களும், அறிமுகவுரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி.செல்வாம்பிகை அவர்களும்,  நன்றியுரையை தகைசால் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

திருக்குறள் ஆய்வுக்கட்டுரை நூலுக்கான வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் அவர்களும், அறிமுகவுரையை கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை பிரதி அதிபர் திரு.ச.லலீசன் அவர்களும் நிகழ்த்தினார்கள். நன்றியுரையை முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Hits: 932