Print

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021

கலைஞர் விருது வழங்கும் நிகழ்வும் கந்தபுராண இறுவெட்டு வெளியீடும்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழாவும் 2021  ஆம் ஆண்டிற்கான  கலைஞர்களை கௌரவித்து  விருது வழங்கும் நிகழ்வும்,  கந்தபுராண படன ஒலிப்பேழை வெளியீடும் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் 18.12.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பேராசியர் அ.சண்முகதாஸ் அவர்களும்,  முனைவர் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் மற்றும்  பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்களும் யாழ் மாநாகர சபை ஆணையாளர் திரு.த. ஜெயசீலன் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.

வடமாகாணத்தில் கலைத்துறைக்கு தொண்டாற்றிய தெரிவு செய்யப்பட்ட  மூத்த கலைஞர்களுக்கு  “கலைக்குரிசில்” விருதும்,  இளம் கலைஞர்களுக்கு “இளம் கலைஞர்” விருதும் வழங்கி வைக்கப்பட்டதுடன், 2020 இல் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட  நூல்களுக்கு “சிறந்த நூற்பரிசு” விருதும்;; வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வுடன் “கந்தபுராண படன ஒலிப்பேழை” வெளியீடும்,  பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடான “வடந்தை” நூலும் வெளியிடப்பட்டன. கலைஞர்கள்,  பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து  நிகழ்வை சிறப்பித்தனர்.

Hits: 2099