Print

“மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்” மற்றும் ‘வடமாகாணத்திலுள்ள வணக்க ஸ்தலங்கள்’ நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் மீள்பதிப்பு செய்த பேராசிரியர் சு.வித்தயானந்தன் அவர்களின் “மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்” நூலும்,  திரு.மா.அருள்சந்திரன் அவர்கள் பதிப்பித்த “வடமாணத்திலுள்ள வணக்க ஸ்தலங்கள்” நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.  வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 22.12.2021 ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ. இளங்கோவன்; அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பேராசிரியர். அ.சண்முதாஸ் அவர்களும் முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்  பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களும் மற்றும் கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும் கலந்து  சிறப்பித்தார்கள்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமைரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. “மட்டக்களப்பு நாட்டார் பாடல்” நூலுக்கான  வெளியீட்டுரையை யாழ் மாநாகர சபை ஆணையாளர் கவிஞர் த. ஜெயசீலன் அவர்கள் வழங்கினார். அறிமுகவுரையை யாழ். பல்கலைக்கழக ஆங்கிலமொழி கற்பித்தல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. க.ஸ்ரீகணேசன் அவர்கள் வழங்கினார்கள். “வடமாணத்திலுள்ள வணக்க ஸ்தலங்கள்” வெளியீட்டுரையை பேராசிரியர். நா.சண்முகலிங்கன்  அவர்கள் நிகழ்த்தினார்.

பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

Hits: 1802