Print

சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை -2023 

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய சிறுவர் இலக்கிய உபகுழுவினருக்கான பயிற்சிப்பட்டறை 2023.01.29 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30மணி  தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம், சிறுவர் இலக்கியத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிட்டார். சிறுவர் இலக்கியம் பற்றிய அறிமுக உரையினையும், சிறுவர் கதைகளும் அவற்றின் சிறப்புக்களும், சிறுவர் கதைகள் எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பாகவும்  யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.இராதாகிருஷ்ணன் அவர்கள் எடுத்து விளக்கினார். அதன்பின்னர் வடமாகாண கட்டடங்கள் திணைக்கள கட்டடக்கலைஞர் திரு.கு.பதிதரன் அவர்கள் சிறுவர்களுக்கான தொடர்பாடல் செய்முறைப்பயிற்சி பற்றி விளக்கத்துடன் கூடியதாக எடுத்துக்கூறினார்.

மதிய உணவு இடைவேளையின் பின்னர் சிறுவர்; பாடல்கள் எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பான விளக்கத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.த.அஜந்தகுமார் அவர்கள் மிகவும் இரசனையுடன் வழங்கியிருந்தார். தொடர்ந்து மாணவர்களிடமிருந்து பின்னூட்டல் பெறப்பட்டது. அதன் பின் நிகழ்வில் கலந்துகொண்ட வளவாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக நன்றியுரையுடன் பிற்பகல் 4.30 மணியளவில் இப்பயிற்சிப்பட்டறையானது இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 1107