Print

வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆலய வழிபாடு தொடர்பான பயிற்சி நெறி - 2023

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆலய வழிபாடு தொடர்பான பயிற்சி நெறி - 2023

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆலய வழிபாடு தொடர்பான பயிற்சி நெறியானது 2023.03.31 (வெள்ளிக்கிழமை) பி.ப 03.00 மணியளவில் சண்டிலிப்பாய் ஐயனார் வீதியில் அமைந்துள்ள இந்து ஆகம நவீன கலை கலாசார நிறுவன அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. செல்வகுமாரி நேசரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வளவாளர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. முதல் நிகழ்வாக தேவார பாராயணம் நடைபெற்றது. அடுத்து பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி. ரஜனி நரேந்திரா அவர்களினால் நிகழ்வு தொடர்பான அறிமுகவுரையும்,  வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நே.செல்வகுமாரி அவர்களால் தலைமையுரை நடைபெற்றதுடன், ஆகமப் பாடசாலை அதிபர் திரு.சிறிகாந்தா அவர்களால் ஆசியுரையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வளவாளர்களான திரு. ஜீவா சஜீவன் அவர்களால் ‘அறநெறிக் கல்வியும் வாழ்வின் சிறப்பும்’ எனும் கருப்பொருளிலும், செஞ்சொற் செல்வர் ஸ்ரீ.ஆதவன் அவர்களால் ‘அறநெறிக் கல்வியும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஆலய வழிபாடும்’ என்ற தலைப்பிலும், மற்றும் ஆசிரியர் திருமதி உதயகுமாரி சுயன் அவர்களால் ‘வழிபாட்டு நடைமுறைகள்’ எனும் தலைப்பிலும் பயிற்சியாளர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் சிறப்பாக ஒவ்வொரு தலைப்பின் பயிற்சியின் பின்னரும் பயிற்சியாளர்களிடையே பின்னூட்டல் எடுக்கப்பட்டு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் போது அனைவருக்கும் சிற்றூண்டி உபசரணை வழங்கப்பட்டது. இறுதி நிகழ்வாக பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி ந.ரஐனி அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து இறை பாராயணம் செய்யப்பட்டு நிகழ்வானது மாலை 06.15 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 25259