Print

தெய்வீக சுகானுபவம் - 09

பயிற்சிப்பட்டறை

தெய்வீக சுகானுபவம் 9 இனை முன்னிட்டு இசைக்கச்சேரி நிகழ்விற்காக இந்;தியாவிலிருந்து வருகை தந்த  புல்லாங்குழல் விற்பன்னர் திரு.ஜே.ஏ.ஜெயந்த் மற்றும் வயலின் விற்பன்னர் பி.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வடமாகாண இசைக்கலைஞர்களுக்காக பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்து நிகழ்த்தியிருந்தனர். பயிற்சிப்பட்டறை நிகழ்வானது 09.09.2023 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  இசை ஆசிரியர்கள், கலைமன்றங்களைச்சேர்ந்த இசை மாணவர்கள், புல்லாங்குழல் பயிற்சியாளர்கள், இத்துறை பயிலும் மாணவர்கள், வயலின் கலைஞர்கள், விற்பன்னர்கள், மாணவர்கள் என 200 பயிற்சியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு புல்லாங்குழல் விற்பன்னர் திரு.ஜே.ஏ.ஜெயந்த் அவர்கள் புல்லாங்குழல் இசை தொடர்பிலும், வயலின் விற்பன்னர்  திரு.பி.அனந்தகிருஷ்ணன் வயலின் தொடர்பாகவும் தனித்தனியாக பயிற்சி வழங்கி இக்கலைகள் தொடர்பிலான உத்வேகமொன்றினை எமது கலைஞர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர்களால் வழங்கப்பட்ட நிறைவுரைகளிலிருந்து இப்பயிற்சிப் பட்டறையின் அவசியத்தினை உணரக்கூடியதாகவிருந்தது. .  நண்பகல் 1.30 மணியளவில் பயிற்சிப்பட்டறையானது நிறைவு பெற்றது.

 

விரலிசை நாதவந்தனம்

வரலாற்றுப் புகழ் பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, யாழ் இந்தியத்துணைத் தூதரகம் இணைந்து நடத்திய 2023ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது தெய்வீக சுகானுபவம் நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில்  நல்லூர் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினர்;களாக வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இயற்கை வளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முன்றலில் இருந்து விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. விழாவில் நல்லூர் சாரங்கம் இசைமன்ற மாணவிகளால் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்கப்பட்டது.  காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தினரின் வரவேற்பு நடன நிகழ்வினைத் n;தாடர்ந்து  கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் வரவேற்புடன் இணைந்த தலைமையுரையினை  நிகழ்த்தினார்.

யாழ் நல்லூர் சாகித்திய வீணாலயா குழுவினரது வீணை விரலிசைக்கச்சேரியினைத் தொடர்ந்து  இந்திய துணைத்தூதுவர் கௌரவ ராகேஷ் நட்ராஜ் அவர்களதும், வடமாகாண ஆளுநா; கௌரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ்   அவர்களதும் பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது. விருந்தினர்களால் இந்தியாவிலிருந்து வருகை தந்த கலைஞர்களுக்கு நினைவுப்பரிசில் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்  அணிசெய் கலைஞர்களாக பங்கேற்ற  உள்ளுர்க்கலைஞர்கள் விருந்தினர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து இந்தியாவின் புல்லாங்குழல் வாத்திய விற்பன்னர் திரு.ஜே.ஏ.ஜெயந்த் மற்றும் வயலின் வாத்திய விற்பன்னர் திரு.பி.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் யாழ் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய தெய்வீக சுகானுபவம் - 09 நாதவந்தனம் இசைக்கச்சேரி ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கச்சேரி  பக்தர்களை இசைவெள்ளத்தில் ஆழ்த்தியதோடு அனைவரதும்; வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். .

தெய்வீக சுகானுபவம் - 09இன் நிறைவாக பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களது நன்றியுரையுடன் பி.ப 10.30 மணிக்கு நாதவந்தனம் புல்லாங்குழல் இசைக்கச்சேரி  இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 13715