Print

அரசாங்க பாடசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்பாடசாலை உணவுத் திட்டத்தைசெயல்படுத்தல்

 “2024 ஆம் ஆண்டு முதல் அரசாங்க பாடசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும் பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான” தேசிய திட்ட எண்ணக்கருவிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் 25.03.2024 ஆம் திகதி கொழும்பு சுஜாத்தா மகளீர் கல்லுரியில் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கு இணையாக மாகாண செயற்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் பங்குபற்றுதலுடன்  மாகாண மட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு  யா / கொக்குவில் ஸ்ரீ ஞானபண்தடித வித்தியாசாலையில் கெரவள ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் 25.03.2024 ஆம் திகதியன்று ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம. பற்றிக் டிறஞ்சன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் மற்றும் அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனா். தொடர்ந்து மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும்  பாடசாலை அதிபர் திரு. மனோகரன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது,

கௌரவ ஆளுநர் அவர்களினால் நிகழ்நிலையில் சிறப்புரை உரை நிகழ்த்தப்பட்டது.

செயலாளர் அவர்களின் உரையினைத் தொடர்ந்து விருந்தினர்களால் உணவுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

Hits: 90